Advertisement

தொடரை தோற்றாலும் பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா

By: Nagaraj Wed, 09 Sept 2020 10:35:44 AM

தொடரை தோற்றாலும் பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா

தொடரை தோற்றாலும் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது ஆஸ்திரேலியா அணி. என்ன விஷயம் தெரியுங்களா.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை அடித்தது.

இங்கிலாந்து அணியில் ஜானி பையர்ஸ்டவ் அதிகபட்சமாக 55 ரன்களை அடித்தார். இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி 3 ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

list,australia,lost,series,england ,பட்டியல், ஆஸ்திரேலியா, தோற்றது, தொடர், இங்கிலாந்து

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

தொடரை இழந்தாலும் இந்த வெற்றி மூலம் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் 275 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்தது ஆஸ்திரேலிய அணி. 271 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் 11 ஆம் தேதி தொடங்குகிறது.

Tags :
|
|
|