Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

By: Nagaraj Thu, 06 Oct 2022 10:44:55 AM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது.

டேவிட் வார்னர் 14, கீரின் 14, மிட்செல் மார்ஷ் 3, மேக்ஸ்வெல் 0, டிம் டேவிட் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை காட்ரெல் வீசினார். முதல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த வேட் இன்னும் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

australia,kyle meyers,six,t20,west indies team,west indies ,ஆகாஷ் சோப்ரா, ஆஸ்திரேலியா, கைல் மேயர்ஸ், மேற்கிந்திய தீவுகள் அணி, வெஸ்ட் இண்டீஸ்

2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி வரும் 7ம் தேதி நடக்கிறது. முதலில் விளையாடிய வீரர் கைல் மேயர்ஸ் 5 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 39 ரன்கள் எடுத்தார். அடித்த ஒரு சிக்சரும் நம்ப முடியாத அளவில் இருந்தது.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய கீரின் ஓவரில் அப்படிபட்ட ஒரு நிகழ்வு நடந்தது. அந்த ஓவரின் 2-வது பந்தை மேயர்ஸ் ஆப் திசையில் சிக்ஸருக்குப் போட்டார். கைல் மேயர்ஸ் அடித்த சிக்சர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அதை நம்பமுடியாத ஷாட் என்று அழைத்தார்

Tags :
|
|