Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக் பணியில் இருந்து நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக் பணியில் இருந்து நீக்கம்

By: Karunakaran Fri, 19 June 2020 1:27:41 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக் பணியில் இருந்து நீக்கம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் பல்வேறு துறைகள் வருமானமின்றி முடங்கி கிடக்கின்றன. கொரோனா வைரஸ் காரணமாக பல கோடி பேர் வேலையிழந்து உள்ளனர்.

சினிமா துறை, போக்குவரத்து துறை, விளையாட்டு துறை போன்ற பல துறைகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

graeme hick,australian cricket board,batting coach,dismissed ,பேட்டிங் பயிற்சியாளர்,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்,கிரேமி ஹிக், பணி நீக்கம்

இந்நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்து வருகிறது. அந்த வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 40 ஊழியர்களை பணியில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது. இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான 54 வயது கிரேமி ஹிக் 2016-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நிதி நெருக்கடி காரணமாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :