Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சூரியகுமாரை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங்

சூரியகுமாரை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங்

By: Nagaraj Sat, 28 Jan 2023 10:53:29 PM

சூரியகுமாரை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங்

புதுடில்லி: ரிக்கி பாண்டிங் புகழாரம்... இந்திய கிரிக்கெட் அணியின் நடுத்தர ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவைப் போன்ற ஒரு சிறந்த ஆட்டக்காரரை நான் இதுவரை பார்த்த்தில்லை என்று பிரபல கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் அவரது தனித்திறமையும், புதுமையான ஆட்ட நடையும் (ஸ்டைல்) இளம் ஆட்டக்காரர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் பான்டிங் குறிப்பிட்டுள்ளார்.

32 வயதான சூரிய குமார் யாதவ், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டின் சிறந்த வீர்ராக அறிவிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஆண்டில் டி20 போட்டியில் 1,000-த்துக்கும் மேலான ரன்களை குவித்த இரண்டாவது ஆட்டக்காரர் சூரியகுமார்தான்.

2022 ஆம் ஆண்டில் சூரிய குமார், இரண்டு சதங்கள், 9 முறை அரை சதம் அடித்து மொத்தம் 1.146 ரன்களை குவித்துள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021 இல் 1,326 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

புதுமையான முறையில் ஆடுவதிலும், திறமையை பயன்படுத்தி ஆடுவதிலும் சூரியகுமாரைப் போன்ற ஒருவரை நான் இதுவரைபார்த்ததில்லை. பந்தை எப்படி எதிர்கொண்டு ஆடவேண்டுமோ அப்படி ஆடுகிறார் சூரியகுமார். டி20 ஆட்டத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

சூரியகுமாரைப் போலவே ஆடப்போவதாக சிலர் கூறிவருகின்றனர். உண்மையிலேயே அவரை பின்பற்றி ஆடினால் அது இந்திய அணிக்கு பெருமை சேர்ப்பதாகவே அமையும் என்றார் பான்டிங்.

ricky ponting,appreciation,suriya kumar,location,lavagam ,ரிக்கி பாண்டிங், பாராட்டு, சூரிய குமார், இடம், லாவகம்

கடந்த ஆண்டு சூரியா 31 சர்வதேச டி-20 போட்டிகளில் பங்கேற்று 1,100 ரன்களை குவித்துள்ளார். அதாவது அவரது ரன் விகிதம் 187.43 ஆக உள்ளது. சராசரி 46.56 ரன்கள் என்ற அளவில் உள்ளது. அவர், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஐ.சி.சி. ஆடவர் பட்டியலில் டி20 ஆட்டத்தில் முன்னிலையான இடத்தை பெற்றுள்ளார்.

குறைந்த ஓவர்கள் கொண்ட ஆட்ட முறையில் அதிக ரன்களைக் குவிப்பது எப்படி என்பதை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவின் டீ வில்லியர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆதம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு இணையாக சூரியகுமார் விளையாடி வருகிறார்.

தாழ்வாக வீசப்படும் பந்துகளை லாவகமாக அடித்து விக்கெட் கீப்பர் தலைக்குமேலே சிக்ஸருக்கு அனுப்புவதில் சூரியகுமார் வல்லவர். சூரியகுமார் உச்சத்தை எட்டுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவர், நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக ஆடி வெற்றியின் உச்சத்தை எட்டிவிட்டார் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டவர்கள் வரிசையில் இப்போது சூரியகுமாரும் இடம்பெற்றுவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Tags :