Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிப்பு

பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிப்பு

By: Nagaraj Tue, 25 Apr 2023 11:14:27 PM

பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிப்பு

மும்பை: அபராதம் விதிப்பு... பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் குவித்தது.

விராட் கோலி 39 பந்துகளில் 62 ரன்களும், மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 77 ரன்களும் குவித்து அணியின் ரன் குவிப்புக்கு உதவியது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 ரன்களும், தேவ்தத் பட்கல் 52 ரன்களும் எடுத்தனர்.

administration,fine,ipl,rs. 24 lakhs,virat kohli, ,அபராதம், ஐபிஎல், நிர்வாகம், ரூ. 24 லட்சம், விராட் கோலி

இந்த போட்டியின் போது பெங்களூர் கேப்டன் விராட் கோலி தாமதமாக பந்து வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவருக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 2 ஆவது பந்து வீசிய பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்தை விடவும் அதிக நேரம் எடுத்துக் கொண்டு பந்து வீசியது. இது ஐபிஎல்லின் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இதன் அடிப்படையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ. 24 லட்சம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

பெங்களூரு அணியில் ஆடும் லெவன் மற்றும் இம்பேக்ட் ப்ளேயர் ஆகியோருக்கு போட்டிக்கான கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அல்லது ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|