Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்

By: Karunakaran Fri, 25 Sept 2020 2:02:12 PM

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்

ஆர்சிபி- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் மயங்க் அகர்வால் சற்று தடுமாறினார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கேஎல் ராகுலில் அபார சதத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் - ஆரோன் பிஞ்ச் ஜோடி களம் இறங்கியது. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து பெங்களூர் அணி 17 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.

bangalore royal challengers,captain,virat kohli,fined ,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கேப்டன், விராட் கோலி, அபராதம்

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 97 ரன்கள் வித்தியாசத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் விராட் கோலியின் அணி செய்யும் முதல் தவறு என்பதால், ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் படி 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு அணி அடுத்து 28ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.

Tags :