Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • குஜராத் அணியிடம் தோற்றதால் பெங்களூர் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது

குஜராத் அணியிடம் தோற்றதால் பெங்களூர் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது

By: Nagaraj Mon, 22 May 2023 6:03:41 PM

குஜராத் அணியிடம் தோற்றதால் பெங்களூர் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது

மும்பை: பிளே ஆப் வாய்ப்பை இழந்தது... ஐபிஎல் போட்டியின் 70-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்ட ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய குஜராத் 19.1 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக மழை காரணமாக இந்த ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. என்றபோதும், ஓவா்கள் குறைக்கப்படாத ஆட்டத்தில் குஜராத் டாஸ் வென்று பௌலிங்கை தோ்வு செய்தது.

பெங்களூா் பேட்டிங்கில் விராட் கோலியுடன் வந்த கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு விடைபெற்றாா். தொடா்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களே சோ்த்து ஸ்டம்பை பறிகொடுத்தாா்.

mumbai,bangalore,out,play-off,lost,gujarat ,மும்பை, பெங்களூர், வெளியேறியது, பிளே ஆப், தோல்வி, குஜராத்

கடைசி விக்கெட்டாக தினேஷ் காா்த்திக் டக் அவுட்டாக, ஓவா்கள் முடிவில் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 101, அனுஜ் ராவத் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 23 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் நூா் அகமது 2, முகமது ஷமி, யஷ் தயாள், ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் குஜராத் இன்னிங்ஸில் தொடக்க வீரா் ரித்திமான் சாஹா 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷுப்மன் கில் சதமடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டு இறுதிவரை நிலைத்தாா். ஒன் டவுனாக வந்த விஜய் சங்கா், கில்லுடன் கூட்டணி அமைக்க 2-ஆவது விக்கெட்டுக்கு இந்த பாா்ட்னா்ஷிப் 123 ரன்கள் சோ்த்தது.

பெங்களூா் தரப்பில் முகமது சிராஜ் 2, விஜய்குமாா் வைசாக், ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். பின்னா் அந்த அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பும் உறுதியானது.

லீக் ஆட்டங்களை நிறைவு செய்த மும்பை, 16 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருந்தவாறு பிளே-ஆஃப் வாய்ப்புக்கு காத்திருந்தது. பெங்களூா் - குஜராத் ஆட்டத்தில் பெங்களூா் தோற்றால் மட்டுமே மும்பைக்கான பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகும் சூழல் இருந்தது. அந்த ஆட்டத்தில் குஜராத் வெல்ல, பெங்களூா் வெளியேற, மும்பை பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

Tags :
|
|
|