Advertisement

டி20 உலக கோப்பை போட்டிக்கு வங்கதேச அணி வீரர்கள் அறிவிப்பு

By: Nagaraj Wed, 14 Sept 2022 6:08:15 PM

டி20 உலக கோப்பை போட்டிக்கு வங்கதேச அணி வீரர்கள் அறிவிப்பு

வங்கதேசம்: டி20 உலக கோப்பை போட்டிக்கு வீரர்கள் அறிவிப்பு... ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

bangladesh,team,players,announcement,tripartite,match ,
வங்கதேசம், அணி, வீரர்கள், அறிவிப்பு, முத்தரப்பு, போட்டி

ஆசியக் கோப்பைப் போட்டியில் விளையாடிய மூத்த வீரர் மஹ்முதுல்லா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். லிடன் தாஸ், யாசிர் அலி, நுருல் ஹசன், ஹசன் மஹ்முத், நஜ்முல் ஹுசைன் சாண்டோ ஆகியோர் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்கள்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் விளையாடிய பர்வேஸ் ஹுசைன், அனாமுல் ஹக், மெஹதி ஹசன், முகமது நயிம் போன்றோரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வான இதே அணி, அக்டோபர் 7 முதல் 14 வரை நடைபெறவுள்ள முத்தரப்புப் போட்டியிலும் பங்குபெறவுள்ளது.

வங்கதேச அணி: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), சபிர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ், அஃபிஃப் ஹுசைன், மொசாடெக் ஹுசைன், லிடன் தாஸ், யாசிர் அலி, நுருல் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், முகமது சைஃபுதீன், டஸ்கின் அஹமது, எபடாட் ஹுசைன், ஹசன் மஹ்முத், நசும் அஹமது, நஜ்முல் ஹுசைன் சாண்டோ.

Tags :
|