Advertisement

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற வங்கதேச அணி

By: Nagaraj Tue, 07 Mar 2023 8:15:49 PM

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற வங்கதேச அணி

சட்டோகிராம்: வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் இங்கிலாந்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இங்கிலாந்து – வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 48.5 ஓவர்களில் 246 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (50 ரன்), விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (70 ரன்), ஷகிப் அல்-ஹசன் (75 ரன், 71 பந்து, 7 பவுண்டரி) அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் (19 ரன்), பில் சால்ட் (35 ரன்) முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்து மிடில் வரிசை தடுமாற்றத்திற்கு உள்ளானது.

curran,england,middle,mushfiqur, ,அணிகள், ரஹிம், வங்காளதேசம், விக்கெட்

டேவிட் மலான் டக்-அவுட் ஆனார். சாம் கர்ரன் (23 ரன்), கேப்டன் ஜோஸ் பட்லரும் (26 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை. அந்த அணி 43.1 ஓவர்களில் 196 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஒரு நாள் போட்டியில் அவரது ஒட்டுமொத்த எண்ணிக்கை 300-ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் வங்காளதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும் 35 வயதான ஷகிப் அல்-ஹசன் 6,976 ரன்களும் (227 ஆட்டம்) எடுத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன் மற்றும் 300 விக்கெட் இரண்டையும் கடந்த 3-வது வீரராக சாதனையாளர் பட்டியலில் இணைந்தார்.

இதற்கு முன்பு இலங்கையின் சனத் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் சாஹித் அப்ரிடி ஆகியோர் இந்த இலக்கை கடந்துள்ளனர். வங்காளதேசத்துக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் இங்கிலாந்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 9-ந் தேதி இதே மைதானத்தில் நடக்கிறது.

Tags :
|
|