Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி கால்இறுதிக்கு முன்னேறியது

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி கால்இறுதிக்கு முன்னேறியது

By: Karunakaran Mon, 10 Aug 2020 5:30:36 PM

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி கால்இறுதிக்கு முன்னேறியது

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் இரவு ‘ரவுண்ட் 16’ எனப்படும் நாக் அவுட் சுற்று ஒன்றில் பார்சிலோனா கிளப் அணி, நபோலி அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 3-1 என்ற கோல் கணக்கில் நபோலியை தோற்கடித்தது.

பார்சிலோனா அணியில் கிளைமென்ட் லெங்லெட் (10-வது நிமிடம்), லயோனல் மெஸ்சி (23-வது நிமிடம்), லூயிஸ் சுவாரஸ் (45-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மெஸ்சி 29-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்ததை மறுஆய்வு ரீப்ளே செய்தபோது, அவர் பந்தை கைகளால் கையாண்டது தெரியவந்ததால் அந்த கோல் மறுக்கப்பட்டது. முதலாவது லீக் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்திருந்தது.

barcelona,quarter-finals,champions league,napoli ,பார்சிலோனா, காலிறுதி, சாம்பியன்ஸ் லீக், நபோலி

இரு ஆட்டங்கள் முடிவின் அடிப்படையில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் நபோலியை வெளியேற்றியது. இதன் மூலம் பார்சிலோனா அணி தொடர்ந்து 13-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணி 4-1 என்ற கோல் கணக்கில் செல்சியாவை வீழ்த்தியது.

முதலாவது லீக்கிலும் பேயர்ன் முனிச் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால், எந்தவித சிக்கலின்றி கால்இறுதிக்கு சென்றது. கால்இறுதி ஆட்டங்களில் அடலன்டா (இத்தாலி) -பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), லெப்ஜிக் (ஜெர்மனி)- அட்லெட்டிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), பார்சிலோனா-பேயர்ன் முனிச், மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து)-லயன் (பிரான்ஸ்) ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Tags :