Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • லா லிகா கால்பந்து தொடரில் ரியல் பீட்சை தோற்கடித்து பார்சிலோனா அணி அபார வெற்றி

லா லிகா கால்பந்து தொடரில் ரியல் பீட்சை தோற்கடித்து பார்சிலோனா அணி அபார வெற்றி

By: Karunakaran Mon, 09 Nov 2020 08:24:29 AM

லா லிகா கால்பந்து தொடரில் ரியல் பீட்சை தோற்கடித்து பார்சிலோனா அணி அபார வெற்றி

பிரபலமான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நோவ் ஸ்டேடியத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பார்சிலோனா அணி, ரியல் பீட்சை எதிர்கொண்டது. தொடக்கத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சியை பயிற்சியாளர் ரொனால்டு கோமேன் வெளியே உட்கார வைத்தார்.

முதல் பாதியில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆன நிலையில் பிற்பாதியில் மெஸ்சியை மாற்று ஆட்டக்காரராக பயிற்சியாளர் கோமேன் களம் அனுப்பினார். 61-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய மெஸ்சி, 81-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் திணித்து அசத்தினார். கிரிஸ்மான், பெட்ரி ஆகியோரும் கோல் போட்டனர்.

barcelona,real peach,la liga,football ,பார்சிலோனா, உண்மையான பீச், லா லிகா, கால்பந்து

இந்நிலையில், கோல் பகுதியில் வைத்து பந்தை கையால் தடுத்ததால் ரியல் பீட்ஸ் அணி வீரர் அய்சா மான்டி சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணிக்கு கடைசி 30 நிமிடங்களில் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழலிலும் ரியல் பீட்ஸ் வீரர் மோரோன் கார்சியா கோல் அடித்தார்.

இறுதியில் பார்சிலோனா 5-2 என்ற கோல் கணக்கில் ரியல் பீட்சை தோற்கடித்தது. கடந்த 5 ஆட்டங்களில் பார்சிலோனா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள பார்சிலோனா 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி என்று 11 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கிறது.

Tags :