Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • லா லிகா கால்பந்து போட்டியில் மலோர்காவை பந்தாடிய பார்சிலோனா கிளப்

லா லிகா கால்பந்து போட்டியில் மலோர்காவை பந்தாடிய பார்சிலோனா கிளப்

By: Karunakaran Mon, 15 June 2020 2:17:02 PM

லா லிகா கால்பந்து போட்டியில் மலோர்காவை பந்தாடிய பார்சிலோனா கிளப்

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருந்தன. ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டித் தொடர் கடந்த 3 மாதங்களாக தடைப்பட்டிருந்தது. தற்போது, லா லிகா கால்பந்து போட்டித் தொடர் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது.

ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டி நடக்கிறது. பாதுகாப்பு கருதி ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மலோர்கா நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி, உள்ளூர் அணியான மலோர்கா அணிகள் மோதின.

barcelona club,la liga football,mallorca,spain ,பார்சிலோனா கிளப்,லா லிகா கால்பந்து,மலோர்கா,ஸ்பெயின்

64-வது வினாடியிலேயே பார்சிலோனா முதல் கோல் அடித்தது. ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணி 65 சதவீதம் வரை பந்தை சுற்றிக் கொண்டிருந்தது. 37-வது நிமிடத்தில் மார்ட்டின் பிராத்வெய்ட்டும், 79-வது நிமிடத்தில் ஜோர்டி அல்பாவும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சியுடன் உதவியோடு கோல் அடித்தனர்.

இறுதி கட்டத்தில் பந்தை மெஸ்சி வலைக்குள் திணித்து அட்டகாசப்படுத்தினார். இந்த சீசனில் மெஸ்சியின் 20-வது கோல் இதுவாகும். இதன் மூலம் லா லிகா கால்பந்து போட்டியில் தொடர்ச்சியாக 12-வது சீசனில் 20 மற்றும் அதற்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இறுதியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் மலோர்காவை வீழ்த்தியது. புள்ளி பட்டியலில் 18-வது இடத்திற்கு தள்ளப்பட்ட மலோர்கா அணி சந்தித்த 17-வது தோல்வி இதுவாகும்.

Tags :