- வீடு›
- விளையாட்டு›
- சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனா ஆண்கள், பெண்கள் அணிக்கு உற்சாக வரவேற்பு
சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனா ஆண்கள், பெண்கள் அணிக்கு உற்சாக வரவேற்பு
By: Nagaraj Tue, 16 May 2023 2:35:20 PM
பார்சிலோனோ: உற்சாக வரவேற்பு... லா லிகா கால்பந்து தொடரில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனா அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பார்சிலோனா ஆண்கள் அணி 27 ஆவது முறையும், பெண்கள் அணி 8 ஆவது முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
இதையொட்டி பார்சிலோனா வீதிகளில் நடைபெற்ற வெற்றி பேரணியில் திறந்த வாகனத்தில் வீரர்கள், வீராங்கனைகள் வலம் வந்தனர்.
இந்த கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உற்சாக முழக்கமிட்டனர். ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு மத்தியில் உற்சாக வரவேற்பில் வீரர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே வந்தனர்.
Tags :
fans |