Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • யூரோப்பியன் சாம்பியனஸ் லீக் கால்பந்து காலிறுதியில் பார்சிலோனாவை துவம்சம் செய்த பேயர்ன் முனிச்

யூரோப்பியன் சாம்பியனஸ் லீக் கால்பந்து காலிறுதியில் பார்சிலோனாவை துவம்சம் செய்த பேயர்ன் முனிச்

By: Karunakaran Sat, 15 Aug 2020 3:42:41 PM

யூரோப்பியன் சாம்பியனஸ் லீக் கால்பந்து காலிறுதியில் பார்சிலோனாவை துவம்சம் செய்த பேயர்ன் முனிச்

யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த அணியான பார்சிலோனாவும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிகளும் மோதின. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் தாமஸ் முல்லர் முதல் கோலை அடித்தார்.

7-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றன. 21-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் இவான் பெரிசிக் ஒரு கோலும், 27-வது நிமிடத்தில் செர்ஜ் காப்ரி ஒரு கோலும், 31-வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் ஒரு கோலும் அடித்தனர்.

bayern munich,barcelona,european champions league,quarter-finals ,பேயர்ன் முனிச், பார்சிலோனா, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், காலிறுதி

முதல் பாதி நேரத்தில் பேயர்ன் முனிச் 4-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியபோது, பார்சிலோனா அணியின் லூயிஸ் சுவாரஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 2-4 எனப் பின்தங்கியது. பின்னர் பேயர்ன் முனிச் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 63-வது நிமிடத்தில் ஜோசுவா கிம்மிச், 82-வது நிமிடத்தில் ராபர்ட் லெவன்டாஸ்கி ஒரு கோலும் அடித்தனர்.

பார்சிலோனா அணியில் இருந்து பேயர்ன் முனிச் அணிக்கு லோன் மூலம் சென்ற பிலிப்பே கவுட்டினோ 85-வது நிமிடத்தில் ஒரு கோலும், 89-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார். அதன்பின் பேயர்ன் முனிச் 8-2 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா அணி மோசமான தோல்வி அடைந்துள்ளது. மெஸ்சி கால்பந்து வரலாற்றில் இதுபோன்ற மோசமான தோல்வியை சந்தித்ததில்லை.

Tags :