Advertisement

இந்திய மகளிர் அணிக்கு ஆறுதல் கூறி பதிவிட்ட பிசிசிஐ செயலர்

By: Nagaraj Fri, 24 Feb 2023 6:52:21 PM

இந்திய மகளிர் அணிக்கு ஆறுதல் கூறி பதிவிட்ட பிசிசிஐ செயலர்

கேப்டவுன்: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் உலக கோப்பை போட்டியில் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணிக்கு ஆறுதல் கூறி பதிவிட்டுள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை 8வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. கேப்டவுனில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மல்லுக்கட்டின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் பெத் மூனி சிறப்பாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியால் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தொடர்ந்து 7வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

bcci,defeat,india,jai shah,match,secretary,semi-final ,அரையிறுதி, இந்தியா, செயலாளர், ஜெய் ஷா, தோல்வி, பிசிசிஐ, போட்டி

வெற்றியின் விளிம்பில் வந்த இந்தியா இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. அந்த சோகம் இம்முறையும் தொடர்கிறது.

இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் உலக கோப்பை போட்டியில் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணிக்கு ஆறுதல் கூறி பதிவிட்டுள்ளார். ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கடுமையான தோல்வி. ஆனால் களத்தில் எங்கள் பெண்களின் உற்சாகத்திற்காக நாங்கள் பெருமைப்பட முடியாது.

குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் அளித்து, அவர்கள் உண்மையான போர்வீரர்கள் என்பதைக் காட்டினர். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம், நீல நிற பெண்களே! என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
|
|
|
|