Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தும் பேச்சு பிசிசிஐ-யின் கடைசி முயற்சி - பொருளாளர் துமல்

வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தும் பேச்சு பிசிசிஐ-யின் கடைசி முயற்சி - பொருளாளர் துமல்

By: Karunakaran Wed, 08 July 2020 3:23:13 PM

வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தும் பேச்சு பிசிசிஐ-யின் கடைசி முயற்சி - பொருளாளர் துமல்

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 29-ந்தேதி முதல் மே மாதம் 23-ந்தேதி வரை நடக்கவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் காலவரையின்றி ஒத்திவைத்தது. இதனால் தற்போது ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், போட்டியை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என பி.சி.சி.ஐ. ஆர்வத்தில் உள்ளது .20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல்.லை நடத்தி விடலாம் என பி.சி.சி.ஐ. தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

bcci,ipl series,abroad,tumul ,பி.சி.சி.ஐ, ஐ.பி.எல் தொடர், வெளிநாடு, துமல்

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், ஐ.பி.எல். லை வெளிநாட்டில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் ஐ.பி.எல் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. தற்போது ஐ.பி.எல்.20 ஓவர் போட்டியை வெளிநாட்டில் நடத்துவது கடைசி கட்ட முயற்சி மட்டுமே என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் கூறுகையில், ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்தவே விரும்புகிறோம். இங்குதான் முழு முன்னுரிமை. அதன் பிறகுதான் வெளிநாடுகள் பற்றி சிந்திக்க வேண்டும். வெளிநாடுகளில் ஐ.பி.எல்.ஐ நடத்துவது என்பது கடைசி கட்ட முயற்சி மட்டுமே. 20 ஓவர் உலக கோப்பை குறித்து இன்னும் முடிவு தெரியவில்லை. இந்த நிச்சயமற்ற நிலையால் ஒவ்வொருவரும் மன அழுத்தத்தில் உள்ளோம் என்று கூறியுள்ளார்.


Tags :
|
|