Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நேஷன்ஸ் கால்பந்து தொடர் லீக் போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி

நேஷன்ஸ் கால்பந்து தொடர் லீக் போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி

By: Nagaraj Tue, 17 Nov 2020 09:23:58 AM

நேஷன்ஸ் கால்பந்து தொடர் லீக் போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பெல்ஜியம் அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்தது.

உலக தரமிக்க ஐரோப்பிய அணிகளுக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் களம் கண்டு வருகின்றன.

அந்த விதத்தில் பெல்ஜியத்தில் உள்ள லிவென் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் மோதின. அப்போது இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

belgium,nations league,football,victory,england ,பெல்ஜியம், நேஷன்ஸ் லீக், கால்பந்து, வெற்றி, இங்கிலாந்து

அதிலும் பெல்ஜியம் அணி தரப்பில் யூரி டிலிமான்ஸ் 10-வது நிமிடத்திலும், டியஸ் மெர்டென்ஸ் 23-வது நிமிடத்திலும் கோல் அடித்து முன்னேற்றியிருந்தனர். இன்னொரு லீக் ஆட்டத்தில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தை தோற்கடித்தது . இத்தாலி அணியில் பெனால்டி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜோர்ஜின்ஹோ 27-வது நிமிடத்திலும், டோமினிகோ பெரார்டி 83-வது நிமிடத்திலும் கோல் அடித்து துவம்சம் செய்தனர்.

இதில் 2 வெற்றி, 3 டிரா கண்டு இருக்கும் இத்தாலி அணி தனது பிரிவில் முதலிடத்துக்கு தகுதி பெற்றிருந்தது . மற்றொரு லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது . அவ்வாறு 5-வது ஆட்டத்தில் ஆடிய டென்மார்க் அணிக்கு இது மூன்றாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது .

Tags :