Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் - ஸ்டீபன் பிளமிங்

சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் - ஸ்டீபன் பிளமிங்

By: Karunakaran Mon, 21 Sept 2020 3:52:38 PM

சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் - ஸ்டீபன் பிளமிங்

13வது ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மைதானத்தில் ரசிகர்கள் இல்லை என்றாலும் முதல் ஐபிஎல் போட்டி பரபரப்பாகவே இருந்தது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என சென்னை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சென்னை அணியில் ஆல்-ரவுண்டர் பிராவோ இடம் பெறவில்லை. பிராவோ இடம் பெறாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே ரெய்னா அணியில் இல்லை. இதில் தற்போது பிராவோவும் இல்லாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

bravo,chennai team,match,stephen fleming ,பிராவோ, சென்னை அணி, போட்டி, ஸ்டீபன் ஃப்ளெமிங்

இந்நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இதுகுறித்து கூறுகையில், சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார். கால் மூட்டியில் காயம் ஏற்பட்டு தற்போது அவர் மீண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சற்று கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவர் முறையில் டெல்லி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் பெங்களூரு, ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

Tags :
|
|