Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சவுதி கால்பந்து அணிக்காக பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஒப்பந்தம்

சவுதி கால்பந்து அணிக்காக பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஒப்பந்தம்

By: Nagaraj Thu, 17 Aug 2023 6:32:04 PM

சவுதி கால்பந்து அணிக்காக பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஒப்பந்தம்

பிரேசில்: சவுதி அணிக்காக ஒப்பந்தம்... பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து கிளபிற்காக 2 ஆண்டுகள் விளையாட இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான நெய்மர் கடந்த 6 ஆண்டுகளாக பிரான்ஸின் பி.எஸ்.ஜி. அணிக்காக விளையாடி வந்தார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவரை அல் ஹிலால் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.

ronaldo,benzema,neymar,european clubs,saudi arabia clubs ,ரொனால்டோ, பென்சிமா, நெய்மர், ஐரோப்பிய கிளப், சவுதி அரேபியா கிளப்

இதற்காக அவருக்கு இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கவும், அவரை விடுவிப்பதற்காக பி.எஸ்.ஜி. கிளப்பிற்கு 850 கோடி ரூபாய் வழங்கவும் அல்-ஹிலால் சம்மதம் தெரிவித்துள்ளது.

ரொனால்டோ, பென்சிமா, நெய்மர் என ஏராளமான நட்சத்திர வீரர்கள் ஐரோப்பிய கிளப்புகளில் இருந்து விலகி சவுதி அரேபியா கிளப்புகளில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|