Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் பும்ரா விராட் கோலியை வீழ்த்தி 100-வது விக்கெட்டை பதிவு செய்தார்

ஐபிஎல் கிரிக்கெட்டில் பும்ரா விராட் கோலியை வீழ்த்தி 100-வது விக்கெட்டை பதிவு செய்தார்

By: Karunakaran Thu, 29 Oct 2020 6:48:40 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் பும்ரா விராட் கோலியை வீழ்த்தி 100-வது விக்கெட்டை பதிவு செய்தார்

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நேற்று நடைபெற்றபோது, மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஜோஷ் பிலிப் 24 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 7.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த விராட் கோலி 9 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 15 ரன்னிலும், ஷிவம் டுபே 2 ரன்னிலும் வெளியேறினர். தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 74 ரன்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது.

bumra,100th wicket,ipl cricket,virat kohli ,பும்ரா, 100 வது விக்கெட், ஐபிஎல் கிரிக்கெட், விராட் கோலி

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபியை 164 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் கட்டுப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக பும்ராவின் பந்து வீச்சு இருந்தது. அவர் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். முதல் விக்கெட்டாக விராட் கோலியை வீழ்த்திய போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 100-வது விக்கெட்டை பதிவு செய்தார் பும்ரா.

பும்ரா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விராட் கோலியை வீழ்த்தியதுதான் முதல் விக்கெட்டாகும். தற்போது 100-வது விக்கெட்டாக அதே அணியின் விராட் கோலியை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags :
|