Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி குறித்து கேப்டன் டோனி கருத்து

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி குறித்து கேப்டன் டோனி கருத்து

By: Karunakaran Sat, 26 Sept 2020 6:00:40 PM

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி குறித்து கேப்டன் டோனி கருத்து

துபாயில் நடந்த 13வது ஐ.பி.எல். 7வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியிடம் வீழ்ந்து மீண்டும் தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 44 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

சென்னை அணி 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் 16 ரன்னில் தோற்று இருந்தது. தற்போது டெல்லியிடம் தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

captain dhoni,csk team,defeat,delhi ,கேப்டன் தோனி, சிஎஸ்கே அணி, தோல்வி, டெல்லி

இந்நிலையில் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறுகையில், இந்த ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. பனித்துளி இல்லை. ஆனால் ஆடுகளம் மெதுவாக இருந்தது. எங்களது பேட்டிங்கில் உத்வேகம் இல்லை. தொடக்கம் முதலே நன்றாக அமையவில்லை. இதனால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது. பேட்டிங்கில் உத்வேகம் இல்லாதது அணியை மிகவும் காயப்படுத்தியது. ஒரு வேகப்பந்து வீச்சாளரையோ, சுழற்பந்து வீரர்ரையோ சேர்த்தால் அது பேட்ஸ்மேனுக்கு அது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறினார்.

மேலும் அவர், அடுத்த போட்டிக்கு அம்பதி ராய்டு வந்து விடுவார். அப்போது எல்லாம் சரியாகி விடும். அணி சமநிலை பெற்று விடும். பந்து வீச்சை பொறுத்த வரை நேர்த்தியாக அமைய வில்லை. பவுலர்களை மாற்றி விட்டால் பிரச்சினை சரியாகி விடாது. அடுத்த 7 நாட்களுக்கு எங்களுக்கு நல்ல இடைவெளி கிடைத்துள்ளது. இதை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

Tags :
|