Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மான்செஸ்டர் டெஸ்டில் வெற்றி பெற காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ்க்கு கேப்டன் ரூட் பாராட்டு

மான்செஸ்டர் டெஸ்டில் வெற்றி பெற காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ்க்கு கேப்டன் ரூட் பாராட்டு

By: Karunakaran Tue, 21 July 2020 7:07:15 PM

மான்செஸ்டர் டெஸ்டில் வெற்றி பெற காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ்க்கு கேப்டன் ரூட் பாராட்டு

மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 2- வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 287 ரன்னில் 'ஆல் அவுட் ' ஆனது.

இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் 16 ரன்னும், கேப்டன் ஜோ ரூட் 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றபோது, இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

captain root,west indies,england,ben stokes ,கேப்டன் ரூட், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, பென் ஸ்டோக்ஸ்


பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 57 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன் எடுத்தார். இந்த டெஸ்டில் 254 ரன்கள் குவித்து , 3 விக்கெட் சாய்த்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், பென் ஸ்டோக்ஸ் பாராட்டுக்குரியவர் என்று கூறினார்.

மேலும் அவர், பென் ஸ்டோக்ஸ் நம்ப முடியாத அபாரமான வீரர். உண்மையிலே அவருக்கு வானமே இல்லை என்று நினைக்கிறேன் என்று கேப்டன் ஜோ ரூட் புகழ்ந்து கூறினார். இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்துக்கு 40 புள்ளிகள் கிடைத்துள்ளது.

Tags :