Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆர்சிபி 97 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைய கேப்டன் விராட் தான் முழுப்பொறுப்பு

ஆர்சிபி 97 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைய கேப்டன் விராட் தான் முழுப்பொறுப்பு

By: Karunakaran Fri, 25 Sept 2020 2:03:20 PM

ஆர்சிபி 97 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைய கேப்டன் விராட் தான் முழுப்பொறுப்பு

துபாயில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஆர்சிபி அணிகள் மோதின. துபாய் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து 160 ரன்களுக்கு மேல் அடித்தால் சேஸிங் செய்வது கடினம். அப்படி இருந்தும் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி-யின் வீரர்கள் சிறப்பாக பந்து வீச கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழக்காவிடிலும், ரன்கள் அதிக அளவில் அடிக்க இயலவில்லை.

பஞ்சாப் அணியில் கேஎல் ராகுல் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். 17-வது ஓவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கே.எல். ராகுல் கொடுத்த எளிதான கேட்ச்-ஐ விராட் கோலி பிடிக்க தவறினார். இதனால் கே.எல். ராகுல் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அப்போது ராகுல் 56 பந்தில் 84 ரன்கள் அடித்திருந்தார். பஞ்சாப் அணி 17 ஓவரில் 146 ரன்கள் அடித்திருந்தது.

captain virat,responsible,rcb,defeat ,கேப்டன் விராட், பொறுப்பு, ஆர்.சி.பி., தோல்வி

18-வது ஓவரை சைனி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்திலும் கேஎல் ராகுல் கொடுத்த எளிதான கேட்ச்-ஐ விராட் கோலி பிடிக்க தவறினார். அப்போது ராகுல் 60 பந்தில் 90 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் 157 ரன்கள் அடித்திருந்தது. விராட் கோலி இரண்டு வாய்ப்புகள் கொடுத்ததை பயன்படுத்திக் கொண்ட கே.எல். ராகுல் 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி சதம் அடித்தார்.

20-வது ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியும், கருண் நாயர் ஒரு பவுண்டரியும் விளாசினர். இந்த ஓவரில் 23 ரன்கள் அடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இதனால் 20 ஓவரல் 206 ரன்கள் குவித்தது. விராட் கோலி முதல் கேட்ச்-ஐ தவறவிட்டபின் கே.எல். ராகுல் 13 பந்தில் 48 ரன்கள் விளாசினார். இதுதான் ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். பேட்டிங்கில் 1 ரன் எடுத்த நிலையில் அவசரப்பட்டு ஆட்டமிழந்ததும் தோல்விக்கு முக்கிய காரணம்.

Tags :
|