Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது... முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது... முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதல்

By: Monisha Sat, 19 Sept 2020 09:31:28 AM

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது... முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதல்

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். அபிதாபியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மல்லுக்கட்டுகிறது.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புவது ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் விலகல் சென்னை அணிக்கு சற்று பின்னடைவு என்ற போதிலும் அதிகமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது சாதகமான அம்சமாகும்.

ipl,cricket,chennai,mumbai,champion ,ஐபிஎல்,கிரிக்கெட்,சென்னை,மும்பை,சாம்பியன்

4 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடைசி நேரத்தில் ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா விலகியது கொஞ்சம் சறுக்கல் தான். ஆனாலும் சாதுர்யமாக பந்து வீசக்கூடிய பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் உள்ளிட்டோர் பந்து வீச்சில் அணியை தூக்கி நிறுத்தி விடுவார்கள். எல்லா வகையிலும் மும்பை அணி வலுமிக்கதாக திகழ்வதால் சென்னை அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஐ.பி.எல்.-ல் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் மும்பையும், 11-ல் சென்னையும் வெற்றி பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டு மும்பையுடன் மோதிய 4 ஆட்டங்களிலும் சென்னை அணி தோல்வியையே தழுவியது. இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை இழந்ததும் அடங்கும்.

கடந்த சீசனில் அடைந்த தோல்விகளுக்கு இந்த ஆண்டு வட்டியும், முதலுமாக முதல் ஆட்டத்திலேயே சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ipl,cricket,chennai,mumbai,champion ,ஐபிஎல்,கிரிக்கெட்,சென்னை,மும்பை,சாம்பியன்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, மிட்செல் சான்ட்னெர் அல்லது இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா, ஷர்துல் தாகூர்.

மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், குருணல் பாண்ட்யா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சாஹர், மெக்லெனஹான் அல்லது பேட்டின்சன் அல்லது நாதன் கவுல்டர்-நிலே, டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

Tags :
|
|