Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் மோதியது குறித்து ஒரு பார்வை

இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் மோதியது குறித்து ஒரு பார்வை

By: Monisha Sat, 19 Sept 2020 11:37:49 AM

இதுவரை சென்னை  மற்றும் மும்பை  அணிகள் நேருக்கு நேர் மோதியது குறித்து ஒரு பார்வை

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

அபிதாபியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. இதற்கு முன்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் சந்தித்தது குறித்து ஆராய்வோம்.

ipl cricket,united arab emirates,20 overs,chennai super kings,mumbai indians ,ஐ.பி.எல். கிரிக்கெட்,ஐக்கிய அரபு அமீரகம்,20 ஓவர்,சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்

இரண்டு அணிகளும் நேருக்குநேர் மோதியதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கையே ஓங்கியுள்ளது. மற்ற அணிகளை வந்து பார் என்று மார்தட்டும் சென்னை அணியால் மும்பை அணிக்கெதிராக மட்டும் அடிபணிந்து விடுகிறது. இதுவரை 28 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் 17 முறை மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. 11 முறைதான் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 2013, 2015, 2019 இறுதிப் போட்டிளும் அடங்கும்.

கடந்த சீசனில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியுள்ளது. இந்த நான்கிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து 4-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. குவாலிபையர் 1-ல் குறைந்த ரன்கள் அடித்து, மும்பையை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

ஒட்டுமொத்த தோல்விக்கும் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை பழிதீர்க்க துடிக்கும்.

Tags :