Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்த சென்னை அணி

ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்த சென்னை அணி

By: Karunakaran Tue, 13 Oct 2020 10:16:15 PM

ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்த சென்னை அணி

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக சர்ம் கர்ரன், டு பிளசிஸ் களமிறங்கினர்.

3வது ஓவரில் டு பிளசிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின், வாட்சன் களமிறங்கினார். சாம் கர்ரன் அதிரடியாக ஆடினார். அவர் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து அம்பதி ராயுடு இறங்கினார். வாட்சன், ராயுடு ஜோடி நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடியது. கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக விளாசினர்.

chennai,ipl,168runs,hyderabad ,சென்னை, ஐபிஎல், 168 ரன்ஸ், ஹைதராபாத்

14வது ஓவரில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. பொறுப்புடன் ஆடிய ராயுடு 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின், வாட்சனும் 42 ரன்னில் அவுட்டானார்.பின்னர் களமிறங்கிய எம்எஸ் டோனியும், ஜடேஜாவும் பொறுப்புடன் ஆடினர். டோனி 13 பந்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். பிராவோ டக் அவுட்டானார்.

கடைசியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 25 ரன்னும் சாஹர் 2 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர். ஐதராபாத் சார்பில் சந்தீப் சர்மா, நடராஜன், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தற்போது 168 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது.

Tags :
|