Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை

By: Karunakaran Fri, 16 Oct 2020 6:46:34 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை

ஐபிஎல் 34-வது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 2-வது முறையாக எதிர்கொள்ளவுள்ளது. துபாயில் ஏற்கனவே நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 44 ரன்னில் தோல்வியடைந்தது. இருப்பினும், கடைசியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி சிஎஸ்கே-வுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. 7-வது போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த பிறகு ஐதராபாத் அணிக்கெதிராக எம்எஸ் டோனி பல்வேறு மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டார்.

பந்து வீச்சு, பேட்டிங்கில் அதிரடி காட்டும் சுட்டிப்பையன் சாம் கர்ரனை தொடக்க வீரராக களம் இறக்கி, வாட்சனை 3-வது வரிசைக்கு இறக்கினார். தைரியமாக ஒரு பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது சிஎஸ்கே-வுக்கு கைக்கொடுத்தது. டோனி பந்து வீச்சாளர்களுக்கான வியூகத்தை சிறப்பாக அமைத்தார். சுட்டிப்பையன் பவர் பிளேயில் 3 ஓவர் வீசி வார்னரை அவுட்டாக்கி அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார். இதே திட்டத்துடன்தான் டெல்லிக்கு எதிராகவும் களம் இறங்கலாம்.

chennai super kings,delhi capitals teams,dhoni,ipl2020 ,சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணி, தோனி, ஐபிஎல் 2020

ஷார்ஜா மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி அதிக ரன்னும், சேஸிங் செய்த அணி படுதோல்வியும் அடைந்த சம்பவம் நடந்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 போட்டிகளில் 6-ல் வெற்றி வாகை சூடியுள்ளது. ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர், ரகானே, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங்கில் உள்ளனர். ரகானே இரண்டு போட்டிகளில் ஜொலிக்கவில்லை. எப்படியும் 160 ரன்களை தாண்டும் திறனையை பெற்றுள்ளது.

ஷ்ரேயாஸ் அய்யருக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டது, ஒருவேளை களம் இறங்காவிடில் அது டெல்லிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். அந்த அணியின் முதுகெலும்பே பந்து வீச்சுதான். ரபடா, அன்ரிச் நோர்ட்ஜே ஜோடி அபாரமாக பந்து வீசுகிறது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின் அந்த அணிக்கு அசுர பலம். அக்சார் பட்டேல் ஆதரவாக இருக்கிறார். ஐந்து பந்து வீச்சாளர்கள் என்றாலும் ஸ்டாய்னிஸ் அவசரத்திற்கு உள்ளார். ஒட்டுமொத்தத்தில் பவுலிங்கை டார்கெட் செய்யும் அணிக்கு வெற்றி நிச்சயம்.

Tags :
|