Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் நாளை பலப்பரீட்சை

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் நாளை பலப்பரீட்சை

By: Karunakaran Thu, 24 Sept 2020 2:36:10 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் நாளை பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ அணியே அதிகமுறை வென்றுள்ளது. இதுவரை இரு அணிகளும் 21 முறை மோதியதில் 15 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. கடந்த சீசனில் இரண்டு லீக், குவாலிபையர்-2 என மூன்று முறை டெல்லியை நசுக்கியது.

இதனால் நாளை நடைபெறும் ஆட்டம் சென்னை அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும். ஆனால் தொடர் தோல்விக்கு இந்த முறை சென்னையை பழிவாங்க டெல்லி அணி துடிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. ஆனால் 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

chennai super kings,delhi capitals,ipl,dhoni ,சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி தலைநகரங்கள், ஐபிஎல், தோனி

முதல் ஆட்டத்தில் வெற்றித் தேடிக்கொடுத்த அம்பதி ராயுடு லேசாக காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் அவர் இல்லாதது சென்னை அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 58 ரன்களும், 2-வது போட்டியில் 37 பந்தில் 72 ரன்களும் அடித்து டு பிளிஸ்சிஸ் நல்ல ஃபார்மில் உள்ளார். ஆனால் டு பிளிஸ்சிஸ் முதல் பந்தில் இருந்து அதிரடி ஆட்டத்தில் களம் இறங்கமாட்டார்.

டெல்லி அணி இந்த முறை தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வெல்லும் என்ற தீர்மானத்துடன் களம் இறங்கியுள்ளது. முதல் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், அக்சார் பட்டேல் உள்ளனர். அஸ்வின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட் வீழத்தினார். ஆனால் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். தற்போது உடற்தகுதி பெற்று சென்னைக்கு எதிராக தயாராவிட்டார். மொத்தத்தில் டெல்லி அணியின் பந்து வீச்சை சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி எதிர்கொள்கிறது என்பதை நாளை தான் தெரியும்.

Tags :
|