Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை

3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை

By: Karunakaran Tue, 06 Oct 2020 5:52:04 PM

3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை

ஐபிஎல் போட்டியில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 23 முறை மோதியதில், சென்னை சூப்பர் கிங்ஸ் 14 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை அதிகபட்சமாக 205 ரன்கள் அடித்துள்ளது. சென்னைக்கு எதிராக கொல்கத்தா 202 ரன்கள் அடித்துள்ளது. இந்நிலையில் அபு தாபியில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இதுவரை அபு தாபியில் ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. அபு தாபி பிட்ச் சற்று டிரிக்கியான இருக்கலாம். 170 ரன்களுக்கு மேல் அடித்தால் சேஸிங் சற்று கடினமானதாக இருக்கலாம். சென்னை அணி ஹாட்ரிக் தோல்விக்குப்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியின் பேட்டிங்கிற்கு வாட்சன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. வாட்சன் பொதுவாக சிங்கிள், டபுள்ஸ் ரன்களை விரும்புவதில்லை.

chennai super kings,kolkata knight riders,clash,3rd win ,சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மோதல், 3 வது வெற்றி

டு பிளிஸ்சில் நங்கூரம் போன்றவர். ஆட்டத்தின் நடுப்பகுதியில் நல்ல ஷாட்களை அடித்து ஆடக்கூடியவர். வித்தியாசமான ஷாட்களால் எதிரணி பவுலர்களை குழப்பி விடுவார் என்று கேப்டன் டோனியோ சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டார். ஷாட்கள் அடிப்பதுடன் சிங்கிள், டபுள்ஸ் அடிப்பதிலும் வல்லவர். இவர் ஸ்டிரைக்கில் பெரும்பாலும் டாட் பால் இருக்காது. பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹர் தனது பணியை செம்மையாக செய்து வருகிறார். பவர் பிளேயில் சென்னை அணிக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட வாய்ப்பில்லை.

வெயின் பிராவோ அணிக்கு திரும்பியுள்ளது டெத் ஓவர்களில் சற்று வலுசேர்த்துள்ளார். தற்போது ஆறு பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது சென்னை அணிக்கு தெம்பை கொடுத்துள்ளது என்று சொல்லலாம். கொல்கத்தா இதுவரை நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டில் தோல்வியடைந்துள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்த வரைக்கும் ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், மோர்கன், ராகுல் திரிபாதி என ஆறு பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

chennai super kings,kolkata knight riders,clash,3rd win ,சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மோதல், 3 வது வெற்றி

அணியில் இருக்கும் மிகப்பெரிய குழப்பமே தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், மோர்கன் ஆகியோரில் யாரை முன்வரிசையில் களம் இறக்குவது என்பதுதன். கடந்த சீசனில் அந்த் ரஸல் சூப்பர் பார்மில் இருந்தார். அவருக்கு போதுமான அளவு பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது பெரும் விவாதமாக கிளம்பியது. மோர்கன் தலைசிறந்த ஹிட்டர். ஆனால் ரஸல், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பின்னர் வந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும் பொறுப்பு இவரது தலையில் விழுகிறது.

அந்த்ரே ரஸல் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும். இல்லை எனில் மோர்கன் முன்னதாக களம் இறங்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடைபெற்றால் கொல்கத்தா விஸ்வரூபம் எடுக்கும். பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் பேட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, ஷிவம் மவி, அந்த்ரே ரஸல் அசத்தக் கூடியவர்கள். முதலில் பேட்டிங் செய்த அணி 170 ரன்களுக்கு மேல் அடித்தால் கடும் சவாலாக இருக்கும்.

Tags :
|