Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது வெற்றிக்காக நாளை பலப்பரீட்சை

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது வெற்றிக்காக நாளை பலப்பரீட்சை

By: Karunakaran Thu, 01 Oct 2020 6:49:55 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது வெற்றிக்காக நாளை பலப்பரீட்சை

போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் பழைய சாதனைகளை எடுத்துக்கொள்ள முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் சொதப்பி வருகிறது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலங்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு எதிராக நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணிக்கெதிராக 176 ரன்களை சேஸிங் செய்யும்போது எந்தவிதமான பேராட்டமின்றி 131 ரன்கள் மட்டுமே எடுத்து சரணடைந்தது.

மூன்று போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது வெற்றிக்காக நானை பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் போட்டிக்கு ஒருவாரம் இடைவெளி இருந்ததால், பேலன்ஸ் அணியை தயார் செய்தல், திட்டமிடல் ஆகியவற்றிற்கு நேரம் கிடைத்திருக்கும். தொடக்க ஜோடியை மாற்ற வேண்டுமா?. இம்ரான் தாஹிரை அணியில் சேர்க்கவா? என்பது குறித்து டோனி யோசித்திருப்பார். பேட்டிங்கில் தொடக்க வீரர்களால் எந்த பயனும் இல்லை.

chennai super kings,sunrisers hyderabad,2nd win,multi-examination ,சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2 வது வெற்றி, பலப்பரீட்சை

கடைசியாக துபாயில் நடைபெற்ற டெல்லி அணிக்கெதிராக 176 இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும்போது எந்தவித நெருக்கடியும் கொடுக்க முடியாமல் 131 ரன்னில் சுருண்டு சரணடைந்தது. கேதர் ஜாதவ் ரோல் என்ன என்பதை எம்எஸ் டோனிதான் விளக்க வேண்டும். டெல்லி அணிக்கெதிரான படுதோல்விக்குப் பிறகு, அம்பதி ராயுடு அடுத்த போட்டியில் விளையாடுவார். ஒரு வாரத்திற்குப்பின் போட்டியில் களம் இறங்குவதால் இந்த ஓய்வு நேரத்தில் மாற்றங்கள் குறித்து டோனியும், ஸ்டீபன் பிளமிங்கும் யோசித்திருப்பார்கள்.

துபாய் மைதானத்தில் இரண்டு அணிகளுமே 175 ரன்களுக்கு குறைவான ஸ்கோரை சேஸிங் செய்ய முடியாமல் தோற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், கடைசியாக விளையாடிய டெல்லி அணிக்கு எதிராக வெற்றியை பெற்றுள்ளது. ரஷித் கான், புவி பந்து வீச்சை எதிர்கொள்வது, பேர்ஸ்டோவ், வார்னரை கட்டுப்படுத்துவதை பொறுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றித் தோல்வி அமையும்.

Tags :