Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று மோதல்

By: Karunakaran Sat, 10 Oct 2020 2:53:15 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று மோதல்

இன்று நடக்கவுள்ள ஐபிஎல் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 16 முறை சிஎஸ்கே-தான் வெற்றி வாகை சூடியுள்ளது. 8 முறைதான் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்த முறை ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் பழைய சாதனைகளை வைத்து கணிக்க முடியவில்லை.

துபாயில் நடைபெற்றுள்ள முதல் 9 போட்டிகளில் 6-ல் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. துபாய் மைதானத்தில் சிஎஸ்கே 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் தோல்வியை சந்தித்தது. துபாய் ஆடுகளம் சற்று ட்ரிக்கானது. முதலில் பேட்டிங் செய்தால் 175 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். அதற்கு மேல் சென்றால் சேஸிங் செய்வது இயலாத காரியம். அல்லது 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இந்த இரண்டும் நடக்க வேண்டுமென்றால் டு பிளிஸ்சிஸ் - வாட்சன் ஜோடி கையில் மட்டுமே உள்ளது.

chennai super kings,royal challengers bangalore,clash,ipl 2020 ,சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மோதல், ஐபிஎல் 2020

சென்னை அணியில் உள்ள மிடில் ஆர்டரில் பியூர் பேட்ஸ்மேனாக இருக்கும் கேதர் ஜாதவ்தான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். வெயின் பிராவோ ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரியில் இருந்து திரும்பியுள்ளார். இதனால் பேட்டிங் செய்வாரா? என்பது சந்தேகம்தான். துபாயில் ஆர்சிபி நான்கு போட்களில் விளையாடி இரண்டு வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி-க்கு பேட்டிங்கில் அந்த அணியின் இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் சிறந்த பக்க பலமாக இருக்கிறார். பிஞ்ச் சிறந்த பவர்பிளே பேட்ஸ்மேன். இதனால் ஆர்சிபி தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது.

விராட் கோலி கடைசி இரண்டு போட்டிகளில் 72, 43 ரன்கள் அடித்து பார்முக்கு வந்துள்ளார். கடைசி போட்டியில் மட்டுமே சரியாக விளையாடவில்லை. பந்து வீச்சில் நவ்தீப் சைனி, சாஹல், வாஷிங்டன் சுந்தர், இசுரு உடனா உள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் சிறப்பாக பந்து வீசாதது அணிக்கு பின்னடைவு. ஒட்டு மொத்தத்தில் இரண்டு அணியின் பேட்டிங்கை பொறுத்தே வெற்றித் தோல்வி அடையும்.

Tags :
|