Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். கிரிக்கெட்: அசத்தல் பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்: அசத்தல் பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

By: Monisha Sat, 19 Sept 2020 11:56:17 AM

ஐ.பி.எல். கிரிக்கெட்: அசத்தல் பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

அபிதாபியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் குறித்து பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, முரளி விஜய், கேதார் ஜாதவ், ஜடேஜா, எம்.எஸ். டோனி, டு பிளிஸ்சிஸ், வெயின் பிராவோ போன்றோர் பேட்டிங்கில் அசத்தக்கூடியர்.

ipl cricket,united arab emirates,20 overs,chennai super kings,mumbai indians ,ஐ.பி.எல். கிரிக்கெட்,ஐக்கிய அரபு அமீரகம்,20 ஓவர்,சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்

கடந்த சீசனில் ஷேன் வாட்சன் தொடக்கத்தில் சொதப்பினார். போட்டிகள் செல்ல செல்ல அதிரடியை வெளிப்படுத்தினார். அம்பதி ராயுடுக்கு 2018 சீசன் போன்று கடந்த சீசன் அமையவில்லை. முதல் நான்கு போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். சிறப்பான விளையாடததால் மிடில் ஆர்டர் வரிசைக்கு இறக்கப்பட்டார். அதன்பின் டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். வாட்சன், டு பிளிஸ்சிஸ் ஜோடி அணியை வெற்றிகரமாக அழைத்துச் சென்றது.

சிறப்பான தொடக்கம் கொடுக்கப்பட்டால் தல டோனி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடுவார். இதனால் முதல் மூன்று பேர் குறிப்பிடத்தகுந்த ரன்கள் அடித்தால் சென்னை அணிக்கு பிரச்சினை இருக்காது.

சின்ன தல ரெய்னா இல்லாதது சென்னைக்கு மிப்பெரிய இழப்பாகும். சுழற்பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்த ரெய்னா இடத்தை நிரப்புவது யார்? என்பதை பொறுத்துதான் மிடில் ஆர்டர் வலுப்பெறும்.

ipl cricket,united arab emirates,20 overs,chennai super kings,mumbai indians ,ஐ.பி.எல். கிரிக்கெட்,ஐக்கிய அரபு அமீரகம்,20 ஓவர்,சென்னை சூப்பர் கிங்ஸ்,மும்பை இந்தியன்ஸ்

வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹர், சர்துல் தாகூர், ஹசில்வுட், சாம் கர்ரன், வெயின் பிராவோ, கேம். எம். ஆசிஃப் போன்ற வீரர்களை கொண்டுள்ளது. தீபக் சாஹர் தொடக்கத்திலும், டெத் ஓவரிலும் சிறப்பாக பந்து வீசக்கூடியர். கடந்த சீசனில் 17 போட்டிகளில் 22 விக்கெட் வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு சராசரியாக 7.47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். வெயின் பிராவோ மிடில் ஓவர்களை பார்த்துக் கொள்வார். இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் சிறப்பாக அமைந்து விட்டால் வேகப்பந்து வீச்சில் எந்த பிரச்சினையும் இருக்காது.

சுழற்பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னெர், இம்ரான் தாஹிர், கர்ண் சர்மா, தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் அசத்திய ஆர். சாய் கிஷோர் உள்ளனர். ஹர்பஜன் சிங் இல்லாதால் இம்ரான் தாஹிர்தான் சுழற்பந்து வீச்சு யுனிட்டை வழிநடத்திச் செல்வார். கடந்த சீசனில் இம்ரானி தாஹிர் 17 போட்டிகளில் 26 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தார். ஒரு ஓவருக்கு 6.69 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இம்ரான் தாஹிர், கர்ண் சர்மா, சாய் கிஷோர் ஆகிய மூன்று பேரில் இரண்டு பேருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு. சுரேஷ் ரெய்னா சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவார். தற்போது ரெய்னா இல்லாதது சென்னை அணிக்கு பந்து வீச்சிலும் சற்று பலம் குறைந்து காணப்படும்.

Tags :