Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மும்பை அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

மும்பை அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

By: Karunakaran Sun, 20 Sept 2020 12:20:16 PM

மும்பை அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று மாலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சவுரவ் திவாரி 42 ரன்களும், டி காக் 33 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் எங்கிடி 3 விக்கெட்டும், தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

chennai super kings,mumbai,ipl,uae ,சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை, ஐபிஎல், யுஏஇ

ஆரம்பத்தில் விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்துள்ளது. அதன்பின், ஆடிய அம்பதி ராயுடுவும், டூ பிளசிசும் பொறுப்புடன் ஆடினர். அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு டு பிளசிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்றதற்கு சென்னை அணி தற்போது பழி தீர்த்துள்ளது.

Tags :
|
|