Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி வேதனை

தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி வேதனை

By: Karunakaran Sat, 03 Oct 2020 1:51:39 PM

தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி வேதனை

துபாயில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்திடம் வீழ்ந்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. இதில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 7 ரன்னில் தோற்றது.

சென்னை அணி தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவியது. ஐதராபாத் அணி தனது 2-வது வெற்றியை பெற்றது. சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் 16 ரன்னிலும், 3-வது ஆட்டத்தில் டெல்லியிடம் 44 ரன்னிலும் தோற்றது.

chennai super kings,ms tony,laments,defeat ,சென்னை சூப்பர் கிங்ஸ், எம்.எஸ் டோனி வேதனை, தோல்வி

ஐதராபாத்திடம் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறுகையில், என்னால் நிறைய பந்துகளை சரியாக ஆட முடியவில்லை. பந்தை அடித்து ஆட வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம். ஆடுகளம் மந்தமாக இருக்கும்போது பந்தை நேரம் எடுத்துக் கொண்டு ஆடுவதுதான் சிறந்தது. 16-வது ஓவருக்கு பிறகு 2 ஓவர் மோசமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக ஆட்டத்தில் இன்னும் மேம்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் எனக்கு தொண்டை வறண்டு விடுகிறது. இதனால் இருமல் வருகிறது. மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன் என்று கூறினார்.

வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறுகையில், இந்த ஆடுகளத்தில் 150 ரன்னுக்கு மேல் நல்ல ஸ்கோராகும். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இது ஒரு மோசமான ஆடுகளம் என்று கூறினார். சென்னை அணி 5-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை நாளை துபாயில் சந்திக்கிறது. அதே தினத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் மும்பையை எதிர்கொள்ளவுள்ளது

Tags :