Advertisement

ஆர்சிபி-யிடம் எளிதாக சரணடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

By: Karunakaran Sun, 11 Oct 2020 08:09:50 AM

ஆர்சிபி-யிடம் எளிதாக சரணடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். விராட் கோலியின் அதிரடியால் 4 விக்கெட் இழப்பிற்கு பெங்களூர் அணி 169 ரன்கள் அடித்தது. பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

கிறிஸ் மோரிஸ் வீசிய ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 3-வது ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடிக்க 7 ரன்கள் கிடைத்தது. கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். சென்னை 19 ரன்னுக்குள் முக்கிய விக்கெட்டை இழந்தது. 25 ரன்னுக்குள் சென்னை முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்தது. அத்துடன் சென்னை அணியில் தோல்வி உறுதியானது.

chennai super kings,surrender,rcb,ipl2020 ,சென்னை சூப்பர் கிங்ஸ், சரணடைதல், ஆர்.சி.பி., ஐ.பி.எல் .2020

4-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன், எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். 16-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் எம்எஸ் டோனி. இதனால் சென்னை 15.3 ஓவரில் 100 ரன்னைத் தாண்டியது. இதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைக்க சென்னை 16 ஓவரில் 106 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஜடேஜா களம் இறங்கினார்.

19-வது ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் பிராவோ (7), ஜடேஜா (7) ஆட்டமிழந்தனர். மோரிஸ் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இறுதியில் சென்னை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்தது. இதனால் ஆர்சிபி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.




Tags :
|