Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கே.எம்.ஆசிஃப் பயோ-பபுள் விதிமுறைகளை மீறியதாக தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கே.எம்.ஆசிஃப் பயோ-பபுள் விதிமுறைகளை மீறியதாக தகவல்

By: Karunakaran Thu, 01 Oct 2020 6:04:33 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கே.எம்.ஆசிஃப் பயோ-பபுள் விதிமுறைகளை மீறியதாக தகவல்

கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் இந்த முறை ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்து வருகிறது. போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கும் விதிதான் பயோ பபுள். இந்த விதியின்படி ஐபிஎல் வீரர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு உள்ளே மட்டுமே செல்ல முடியும். பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் இடங்களுக்கு வீரர்கள் செல்ல முடியாது.

ஐபிஎல் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருக்கும் பயோ பபுள் இடங்களுக்கு வெளியே ஹோட்டலில் வேறு எந்த பகுதிக்கும் வீரர்கள் செல்லக்கூடாது. அதேபோல் போட்டி, பயிற்சி தவிர வேறு காரணங்களுக்காகவும் ஹோட்டலை விட்டு வீரர்கள் வெளியே செல்ல முடியாது. இந்நிலையில் சிஎஸ்கே வீரர் ஆசிப் பயோ பபுள் விதியை மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

chennai super kings,km asif,bio-bubble rules,ipl ,சென்னை சூப்பர் கிங்ஸ், கே.எம். ஆசிப், பயோ-பப்பில் விதிகள், ஐ.பி.எல்

சிஎஸ்கே பயிற்சிக்கு சென்றுவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய ஆசிப் தன்னுடைய அறை சாவியை மைதானத்தில் மறந்து வைத்துவிட்டதால் புதிய சாவியை வாங்குவதற்காக ரிசப்ஷன் வந்துள்ளார். ஆனால் இந்த ரிஷப்ஷன் பகுதி இந்த பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் பகுதி என்பதால் இது விதிமீறல் மீறியதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், பயோ-பபுள் விதிமுறையை ஆசிஃப் மீறவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில், சிஎஸ்கே வீரர்கள் சந்திக்கும் ஓட்டல் ஸ்டாஃப்கள் மாறுபட்டவர்கள். ஆசிப் அங்கே சென்று, வழக்கமான ஸ்டாஃப்களுடன் பேச முடியாது. வீரர்களுடன் அர்ப்பணிப்பான குழு வேலை செய்து வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆசிஃப் சாவியை தொலைத்து விட்டு, ரிசப்சன் சென்று கேட்டது உண்மை. வழக்கமாக பணிபுரியும் ஸ்டாஃப் இடம் சென்று அவர் சாவி கேட்டகவில்லை. இந்த விசயம் ஊதி பெரியதாக்கப்படுகிறது. உண்மையை மனதில் வைக்க வேண்டும். கொரோனா வைரஸ் மோசமானது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.

Tags :