Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வெற்றிகரமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

வெற்றிகரமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

By: vaithegi Sun, 21 May 2023 11:09:43 AM

வெற்றிகரமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ....
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 3 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. டேவன் கான்வே 52 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.3 ஓவர்களில் 141 ரன்களை வேட்டையாடியது. ஷிவம் துபே 9 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் விளாசினார். ரவீந்திர ஜடேஜா 7 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் தோனி 4 பந்துகளில் 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

chennai super kings,play off ,சென்னை சூப்பர் கிங்ஸ்,பிளே ஆஃப்

மேலும் 224 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தனிநபராக போராடிய கேப்டன் டேவிட் வார்னர் 58 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் சேர்த்து பதிரனா பந்தில் ஆட்டம் இழந்தார்.

பிரித்வி ஷா 5, பில் சால்ட் 3, ரீலிரோசோவ் 0, யாஷ் துல் 13, அக்சர் படேல்15, அமன் ஹக்கிம் கான் 7, லலித் யாதவ்6, குல்தீப் யாதவ் 0 ரன்னில் நடையை கட்டினர். சிஎஸ்கே சார்பில் தீபக் சாஹர் 3விக்கெட்களை வீழ்த்தினார். தீக்சனா,பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணியானது 17 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் கால்பதிப்பது இது 12-வது முறை ஆகும்.

Tags :