Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடாது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடாது

By: Karunakaran Sun, 30 Aug 2020 5:41:23 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக  விளையாடாது

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கவிருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்று விட்டன.

போட்டிக்கு இன்னும் 3 வாரங்கள் குறைவாக உள்ள நிலையில் போட்டி அட்டவணை வெளியிடப்படாமல் உள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரெய்னா தனிபட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகியுள்ளார். மேலும் அணியில் உள்ள தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் கொரோனா பாதிப்பு உள்ளது.

chennai super kings,mumbai indians,corona virus,emirates ,சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொரோனா வைரஸ், எமிரேட்ஸ்

சென்னை சூப்பர் அணியில் உள்ள உதவியாளர்களில் 11 பேர் கொரோனாவுக்கு சிக்கி உள்ளனர். கொரோனா காரணமாக சி.எஸ்.கே. அணி வீரர்களால் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. மேலும் ஒரு வாரம் தனிமைக்கு பிறகே பயிற்சியில் ஈடுபட முடியும். தற்போது எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் விளையாடாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத திட்டமிடப்பட்டு இருந்தது. இதனால், மும்பையுடன் வேறு ஒரு அணி தொடக்க போட்டியில் விளையாடும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா விலகியது பின்னடைவாக கருதப்படுகிறது. ரூ.11 கோடி ஊதியம் பெறும் அவருக்கு பதிலாக மாற்று வீரரை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் விரைவில் அறிவிக்கும்.

Tags :