Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மும்பை அணியை வீழ்த்திய நம்பிக்கையில் நாளை களம் இறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை அணியை வீழ்த்திய நம்பிக்கையில் நாளை களம் இறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்

By: Karunakaran Thu, 22 Oct 2020 8:05:57 PM

மும்பை அணியை வீழ்த்திய நம்பிக்கையில் நாளை களம் இறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னனை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய 99.99 சதவீதம் இழந்து விட்டது.

முதல் ஏழு போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தபோது சிஎஸ்கே கப்பலில் ஓட்டைகள் உள்ளன. ஒன்றை அடைத்தால் மற்றொன்று உருவாகிறது என டோனி வேதனையுடன் கூறினார். பந்து வீச்சு சரியாக இருந்தால் பீல்டிங் சரியில்லை. பேட்டிங் சரியில்லை. பேட்டிங் நன்றாக இருந்தால் பந்து வீச்சு சரியில்லை என்ற நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஏற்கனவே வெற்றி பெற்றிருப்பதால் அந்த உத்வேகத்துடன் வேண்டுமென்றால் விளையாடலாம்.

chennai super kings,field,mumbai team,ipl 2020 ,சென்னை சூப்பர் கிங்ஸ்,களம், மும்பை அணி, ஐபிஎல் 2020

மும்பை இந்தியன்ஸ் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பிறகு சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது. சிஎஸ்கே-யிடம் முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் விளையாடி வெற்றியுடன் பாயின்ட் டேபிளில் முதல் இடத்தை பிடிக்க விரும்பும். குயின்டன் டி காக் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது அந்த அணிக்கு சிறந்த பலமாக கருதப்படுகிறது.

மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவர் அணியை இழுத்துச் செல்ல ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் என பேட்டிங் பட்டாளமே உள்ளது. எப்படியும் 160 ரன்களை தாண்டி விடும். பந்து வீச்சில் அந்த அணிக்கு பும்ரா, ராகுல் சாஹர் மிகப்பெரிய பலம். பும்ராவுக்கு இணையாக டிரென்ட் போல்ட் பந்து வீசி வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

Tags :
|