Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

By: Karunakaran Tue, 22 Sept 2020 7:43:37 PM

ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

13-வது ஐபிஎல் 2020 சீசன் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை ஐபிஎல் 2020 சீசன் திருவிழா தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வேற்றி பெற்றன. இந்நிலையில், ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

chennai super kings,toss,field,ipl ,சென்னை சூப்பர் கிங்ஸ், டாஸ், பீல்ட், ஐ.பி.எல்

சென்னை அணியில் 1. வாட்சன், 2. முரளி விஜய், 3. டு பிளிஸ்சிஸ் 4. கேதர் ஜாதவ், 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. சாம் கர்ரன், 8. பியூஷ் சாவ்லா, 9. தீபக் சாஹர், 10. லுங்கி நிகிடி. 11. ருத்து கெய்க்வார்டு போன்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 1. ஸ்மித், 2. டேவிட் மில்லர், 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. டாம் கர்ரன், 5. ராபின் உத்தப்பா, 6. சஞ்சு சாம்சன், 7. ஷ்ரேயாஸ் கோபால், 8. உனத்கட், 9. ஜெய்ஸ்வால். 10. ராகுல் டெவாட்டியா, 11. ரியான் பராக் போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

Tags :
|
|