Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சு தேர்வு

By: Karunakaran Sat, 19 Sept 2020 8:12:52 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ்  டாஸ் வென்று முதலில் பந்து வீச்சு தேர்வு

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர் கொள்கிறது. இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. அதற்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது.

chennai super kings,toss,field first,ipl cricket ,சென்னை சூப்பர் கிங்ஸ், டாஸ், பீல்ட் ஃபர்ஸ்ட், ஐபிஎல் கிரிக்கெட்

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புவது ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது.

சென்னை அணியில் : முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (கேப்டன்), ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், பியுஸ் சாவ்லா, லுங்கி ங்கிடி ஆகியோர் உள்ளனர்.

மும்பை அணியில் : ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ராகுல் சாஹர், பேட்டின்சன், டிரண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் உள்ளனர்.

Tags :
|