Advertisement

10-வது முறையாக பைனலுக்கு நுழைந்த சென்னை அணி

By: vaithegi Wed, 24 May 2023 11:01:16 AM

10-வது முறையாக பைனலுக்கு நுழைந்த சென்னை அணி

ஐபிஎல்-இன் முதல் தகுதிச்சுற்று CSK vs GT போட்டியில், சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..... ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளேஆப் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், முதல் தகுதிச்சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

எனவே இதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களும், கான்வே 40 ரன்களும், ஜடேஜா 22 ரன்களும் குவித்தனர். குஜராத் அணியில் மோஹித் ஷர்மா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் என்ற இலக்கில் குஜராத் அணியில் முதலில் களமிறங்கிய விருத்திமான் சாஹா 12 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மிக பொறுப்பாக விளையாடினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

chennai team,wicket ,சென்னை அணி ,விக்கெட்டு

இதன்பின்னர், சுப்மன் கில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். ஆனால், அடுத்தடுத்து வந்த குஜராத் அணி வீரர்கள் பெரிதாக சோபிக்காமல் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இறுதியில் ரஷித் கான் அதிரடியாக விளையாடி நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் நூர் அகமது, முகமது ஷமி ஜோடி களத்தில் இருந்தும் அவர்களால் வெற்றி இலக்கை எட்ட இயலவில்லை. எனவே முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 42 ரன்களும், ரஷித் கான் 30 ரன்களும் குவித்தனர்.

சென்னை அணியில் தீபக் சாஹர், மதீஷ பத்திரன, ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேஷ் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி 10-வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. மேலும், சென்னை அணி முதன்முறையாக குஜராத் அணியை வென்றுள்ளது.

Tags :