Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை அணியின் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் டிரிங்ஸ் சுமந்த இம்ரான் தாஹிர்

சென்னை அணியின் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் டிரிங்ஸ் சுமந்த இம்ரான் தாஹிர்

By: Karunakaran Fri, 16 Oct 2020 11:57:36 AM

சென்னை அணியின் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் டிரிங்ஸ் சுமந்த இம்ரான் தாஹிர்

தென்னாப்பிரிக்காவின் சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக ஜொலித்தார். இந்நிலையில், துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனில் இம்ரான் தாஹிர், ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கரீபியன் பிரிமீயர் லீக் தொடரிலும் 15 விக்கெட்டுகளை தாஹிர் வீழ்த்தியிருந்தார். ஆனாலும், சென்னையின் ஆடும் லெவனில் அவர் இடம் கிடைக்காமல் உள்ளார். இந்நிலையில், அவர் களத்தில் விளையாடும் வீரர்களுக்கு டிரிங்ஸ் எடுத்துச் செல்லும் பணிகளை அவ்வப்போது கவனித்து வருகிறார்.

chennai super kings,xi team player,imran tahir,drinks ,சென்னை சூப்பர் கிங்ஸ், லெவன் அணி வீரர், இம்ரான் தாஹிர்,டிரிங்ஸ்

இது குறித்து இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பல வீரர்கள் எனக்கு டிரிங்ஸ் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இப்போது நான் அந்த பணியை திரும்ப செய்து வருகிறேன். களத்தில் விளையாடும் வீரர்களுக்கு டிரிங்ஸ் கொடுத்து வருகிறேன். அது என் கடமையும் கூட என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நான் அணியில் விளையாடுகிறேனா? இல்லையா என்பது விஷயமல்ல. எனது அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம். எனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செய்வேன் என தெரிவித்துள்ளார்.

Tags :