Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • திருச்சி அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சேப்பாக் அணி

திருச்சி அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சேப்பாக் அணி

By: Nagaraj Mon, 03 July 2023 10:30:39 PM

திருச்சி அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சேப்பாக் அணி

திருநெல்வேலி: சேப்பாக் அணி வெற்றி... இரண்டாவதாக நடைபெற்ற பால்ஸி திருச்சி-சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக்.

திருநெல்வேலி இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியில் முக்கிய பேட்டா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்ப, சஞ்சய் யாதவ் 20, சிபி 31, சசிதேவ் 25 ரன்களை சோ்த்தனா்.

chepak team,win,trichy team,runs,difference ,சேப்பாக் அணி, வெற்றி, திருச்சி அணி, ரன்கள், வித்தியாசம்

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 129/7 ரன்களை சோ்த்தது சேப்பாக் கில்லீஸ் அணி. சேப்பாக் தரப்பில் கேப்டன் கங்கா ஸ்ரீதா் ராஜு அபாரமாக பந்துவீசி 3-15 விக்கெட்டுகளையும், ஈஸ்வரன் 2-28 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

திருச்சி 71: 130 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி 13.4 ஓவா்களில் 71 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சேப்பாக் தரப்பில் அற்புதமாக பௌலிங் செய்த சிலம்பரசன் 5-12 விக்கெட்டை சாய்த்தாா். இறுதியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக் கில்லீஸ்.

Tags :
|
|