Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தோனியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு

தோனியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Fri, 07 July 2023 10:19:22 AM

தோனியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 42-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கிரிக்கெட் உலகில் தனக்கென தனி ரசிகர் படையையும் , செல்வாக்கையும் கொண்டு உள்ள தோனி என்றுமே ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருப்பார் என்பதில் துளி அளவும் ஐயமில்லை.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், கேப்டன் என்று அனைவருக்கும் ஒரு ரோல் மாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்த விதமான கடினமான சூழ்நிலையிலும் பொறுமையை கையாண்டு கூல் கேப்டன் என்ற சிறப்பு பெயரை பெற்று உள்ள இவர், கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தி வந்தார் .

chief minister stalin,dhoni ,முதல்வர் ஸ்டாலின்,தோனி


இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 15 ஆண்டுகளாக வலம் வரும் இவர் 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்து உள்ளார்.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதையடுத்து இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் csk's thala forever தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்களின் சாதனைகளும் பணிவும் பல இளைஞர்களின் வாழ்க்கையில் குறிப்பாக சாதாரண மக்கள் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும் .உங்களின் ஒப்பற்ற தலைமை பண்புகளால் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :