Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கரீபியன் பிரிமீயர் லீக்கில் இருந்து சொந்த காரணத்திற்காக விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவிப்பு

கரீபியன் பிரிமீயர் லீக்கில் இருந்து சொந்த காரணத்திற்காக விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவிப்பு

By: Karunakaran Thu, 25 June 2020 7:30:55 PM

கரீபியன் பிரிமீயர் லீக்கில் இருந்து சொந்த காரணத்திற்காக விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவிப்பு

டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னனான வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், ஐபிஎல் லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரிமீயர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் போன்ற அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார்.

இரண்டு முறை தல்லாவஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல கிறிஸ் கெய்ல் காரணமாக அமைந்தார். இந்நிலையில், 2020 சீசனில் செயின்ட் லூசியா ஜவுக்ஸ் அணிக்கு அவர் மாறினார். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 10-ந்தேதி வரை சிபிஎல் நடைபெறவுள்ளது. இதில் செயின்ட் லூசியா அணி ஏப்ரல் மாதம் கெய்லை வாங்கியது.

chris gayle,caribbean premier league,west indies,st. lucia ,கரீபியன் பிரிமீயர் லீக், கிறிஸ் கெய்ல்,வெஸ்ட் இண்டீஸ்,செயின்ட் லூசியா

தற்போது இந்த வருட சீசனில் இருந்து கிறிஸ் கெய்ல் தனது சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியை கரீபியின் பிரிமீயர் லீக் தொடரின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில், லாக்டவுன் காரணமாக குடும்பத்தை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இளைய மகள் செயின்ட் சிட்ஸில் இருக்கிறார். நான் ஜமைக்காவில் இருக்கிறேன். அதனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இடைவெளி தேவை என்று கூறியுள்ளார்.

Tags :