Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அவருடன் என்னை ஒப்பிடுவதா? இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் மறுப்பு

அவருடன் என்னை ஒப்பிடுவதா? இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் மறுப்பு

By: Nagaraj Thu, 10 Sept 2020 09:18:12 AM

அவருடன் என்னை ஒப்பிடுவதா? இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் மறுப்பு

நான் விராட் கோலி போன்ற ஒரு வீரரின் அருகில் இருப்பதாக கூட நினைக்கவில்லை என்று கிரிக்கெட் வீரர் டேவிட்மாலன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மாலன் டி 20 போட்டிகளில் சிறந்த பேட்டிங் சராசரிகளை பெற்று வெறும் 16 இன்னிங்ஸ்-ல் ஏழு அரை சதங்களும் ஒரு சதமும் அடித்ததன் மூலம் 3 விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டார்.

ஆனால் விராட் கோலியுடன் தன்னை ஒப்பிட்டது குறித்து பேசியுள்ள சேவிட் மாலன், விராட் கோலி அளவுக்கு தான் இல்லை என கூறியுள்ளார். அதோடு, “நான் விராட் கோலி போன்ற ஒரு வீரரின் அருகில் இருப்பதாக கூட நினைக்கவில்லை. ஒருவேளை 50 ஆட்டங்களில் விளையாடியிருந்தால் என்னை ஓரளவிற்கு அவர்களுடன் ஒப்பிடலாம்.

england player,david malone,captain,virat kohli ,இங்கிலாந்து வீரர், டேவிட் மாலன், ஆட்டநாயகன், விராட் கோலி

ஜேசன் மற்றும் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் ஒரு கட்டத்தில் திரும்பி வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதுவரை எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி என்னால் முடிந்த அளவு ரன்கள் எடுப்பது எனது வேலை. இது கடினமாக இருந்தது. அணியில் இடத்தை பிடித்திருக்கும் வீரர்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அவர்களின் சாதனைகள் அருமை. அணியில் நுழைவதற்கு, நீங்கள் மிகவும் சீராக விளையாடி இங்கிலாந்துக்கு வெற்றிகளை பெற்றுத் தர வேண்டும். அப்படி ஒரு வீரர்தான் நான். அணியில் எங்கு நிற்கிறேன் என்பதை அறிய விரும்புகிறேன். அப்போதுதான் தொடரில் விளையாடும்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.

மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்யும் டேவிட் மாலன் இதுவரை டி 20 போட்டிகளில் 682 ரன்கள் அடித்துள்ளார். செப்டம்பர் 4 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 66 ரன்கள் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

Tags :