Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் முழுமையான வெற்றி

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் முழுமையான வெற்றி

By: Nagaraj Sat, 30 July 2022 3:35:41 PM

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் முழுமையான வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் 4-0 என முழுமையாக வெற்றி பெற்றது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் 4-0 என முழுமையாக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் சேலம் பகுதியைச் சேர்ந்த 26 வயது செஸ் வீராங்கனை நந்திதா பி.வி., 2020-ல் மகளிர் கிராண்ட்மாஸ்டராக ஆனார்.

olympiad,tournament,india c team,introduction,first day,twitter ,ஒலிம்பியாட், போட்டி, இந்திய சி அணி, அறிமுகம், முதல்நாள், ட்விட்டர்

பிரபல பயிற்சியாளர் ஆர்பி ரமேஷிடம் பயிற்சி பெற்றவர். சென்னை ஒலிம்பியாட் போட்டியில் இந்திய சி அணியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியதை முன்னிட்டு தன்னுடைய ட்விட்டர் பகுதியில், முதல் நாள் ஒலிம்பியாட் இனிதே துவங்கியது என்று தமிழில் ட்வீட் வெளியிட்டார்.

மேலும் ட்விட்டரில் தன்னுடைய அறிமுகத்தில் தமிழ் பெண் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :