Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Fri, 28 Aug 2020 7:04:09 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றதால், ஐபிஎல் போட்டியை அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 13-வது ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21-ந்தேதி துபாய் சென்றது. அணி வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் தனித்தனியாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

corona virus,fast bowler,chennai super kings team,abu dhabi ,கொரோனா வைரஸ், வேகப்பந்து வீச்சாளர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அபுதாபி

இந்த ஆறு நாட்களில் முதல் நாள், 3-வது நாள் மற்றும் 6-வது நாள் என மூன்று நாட்கள் கொரோனா பரிசோதனை செய்யப்படும். மூன்று பரிசோதனைகளிலும் நெகட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆறு நாட்கள் முடிந்த நிலையில், இன்று வீரர்கள் பயிற்சிக்கு தயாராக இருந்தனர்.

தற்போது ஒரு வேகப்பந்து வீச்சாளர் உள்பட 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்த பிறகு வீரர்களும் பயோ-செக்யூர் பப்பிள் என்ற வளையத்திற்குள் வருவார்கள். ஒரு வீரர் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வீரர்களின் பயிற்சி பாதிக்கப்படும்.

Tags :