Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்...ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்...ரசிகர்கள் மகிழ்ச்சி

By: Monisha Wed, 02 Sept 2020 10:41:12 AM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்...ரசிகர்கள் மகிழ்ச்சி

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளும் துபாய் சென்று அடைந்தன.

இந்த நிலையில் திடுக்கிடும் தகவலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஒருவர் உள்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக வெளிவந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே சொந்த சோகம் காரணமாக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியுள்ளார் என்பதும் அவர் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என்று கருதப்பட்டது.

chennai super kings,corona virus,negative,cricket,fans ,சென்னை சூப்பர் கிங்ஸ்,கொரோனா வைரஸ்,நெகட்டிவ்,கிரிக்கெட்,ரசிகர்கள்

இந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு கடந்த வாரம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் உள்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி 13 பேருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 'விசில் போடு' என்று கூறி மகிழ்ச்சியில் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 5 நாட்களிலேயே நெகட்டிவ் ரிசல்ட் வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags :